விநியோக குத்தகை தொடர்பிலான விசாரணை; நால்வர் கைது

16/06/2021 08:15 PM

புத்ராஜெயா, 16 ஜூன் (பெர்னாமா) -- ஓர் அமலாக்க நிறுவனத்திற்கான நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய விநியோக குத்தகை தொடர்பிலான விசாரணைக்கு உதவ, அமைச்சு ஒன்றின் பொதுச் சேவைத்துறை ஊழியர் உட்பட நான்கு ஆடவர்கள் இன்று, புதன்கிழமை தொடங்கி அடுத்த 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

32 வயது தொடங்கி 61 வயதுடைய அவர்கள் அனைவரும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.பி.ஆர்.எம்.-ம்மின் விண்ணப்பத்தைச் செவிமடுத்தப் பின்னர், புத்ராஜெயா மாஜிஸ்திரேட்,  ஷா வீரா அப்துல் ஹலிம் வரும் ஜூன் 21ஆம் தேதி வரை தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்தார்.

அச்சந்தேக நபர்கள் அனைவரும், நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய சேவைக் குத்தகையைப் பெற, அத்திட்டத்தின் மதிப்பில் ஐந்து விழுக்காட்டை கையூட்டாக கேட்டு பெற்றுக் கொண்டதாக நம்பப்படுகிறது.

2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டம், செக்‌ஷன் 16 உட்பிரிவு a (A)-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)