உலகம்

இங்கிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாட்டுகளுக்கான தளர்வுகள் ஒத்திவைப்பு

15/06/2021 04:49 PM

லண்டன், 15 ஜூன் (பெர்னாமா)  -- அடுத்த வாரம் தொடங்கி இங்கிலாந்தில் வழங்கவிருந்த கொவிட்-19 கட்டுப்பாட்டுகளுக்கான தளர்வுகள் இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

அந்நாட்டில் டெல்தா வகைக் நச்சுயிரி வேகமாக பரவிவருவதால் தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் அந்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படுவதால் கட்டுப்பாடுகள் நீண்ட காலத்திற்கு நீட்டிக்கப்படாது என்று போரிஸ் ஜான்சன் கூறினார்.

''நாங்கள் ஒவ்வொரு நாளும் நிலையைக் கண்காணிப்போம், இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆபத்து குறைந்துவிட்டது என்று நாங்கள் முடிவு எடுத்தால் நான்காம் கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பை பரிசீலிப்போம். முழு தளர்வும் விரைவில் வழங்கப்படலாம்,'' என்றார் அவர்.

முன்னதாக, ஜூன் 21ஆம் தேதி வரை அமலில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி, உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள் செயல்பட அனுமதி வழங்குவதற்கு போரிஸ் ஜான்சன் அரசு திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் திட்டமிட்டது போல் கொவிட்19 சம்பவங்கள் குறையவில்லை என்பதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)