பொது

அடுத்த 2 வாரங்கள் முக்கியமான காலக்கட்டம் - டாக்டர் நோர் ஹிஷாம்

13/06/2021 05:10 PM

புத்ராஜெயா, 13 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் பதிவாகும் கொவிட்-19 தினசரி சம்பவங்களை நான்காயிரத்திற்கும் குறைவாக பதிவு செய்வதில் அடுத்த இரண்டு வாரம் அமலில் இருக்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி முக்கிய காலக்கட்டமாகும் என்று டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

தினசரி ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வரும் கொவிட்-19 சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு இக்காலக்கட்டத்தில் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

கொவிட்-19 பரவலின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் இச்சூழலில், சில தரப்பினர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் போன்ற தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுப்படுவது வருத்தமளிப்பதாக டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தமது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டார்.

இது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் அவர் சாடியிருக்கிறார்.

அதோடு, அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி, கொவிட்-19 நோய்க்கு ஆளாகினால் சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது போதுமான இடமில்லை என்பதை பொதுமக்கள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]