உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

05/05/2021 08:31 PM

மெக்சிக்கோ சிட்டி, 05 மே (பெர்னாமா) -- மெக்சிக்கோவில், மெட்ரோ அதிவிரைவு ரயில் செல்லும் தண்டவாளம் உடைந்து சாலையில் விழுந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்திருக்கின்றது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கபட்டு, நீதி நிலைநாட்டப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

டெக்சஸ், அமெரிக்கா

அமெரிக்கா, டெக்சஸ் மாநிலத்தின் எலிஸ் மாகாணத்தில் வீசிய இரண்டு இரண்டு சூறாவளிகளில், எண்மர் காயமடைந்ததிருக்கின்றனர். அப்பகுதியின் போக்குவரத்து ஸ்தம்பித்து போயிருக்கும் நிலையில், 50-க்கும் மேற்ப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக என்பிசி செய்தி நிறவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்படிருப்பதாகவும், இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலி, கொலம்பியா

கொலம்பியாவின் வறுமைநிலைக்கும் ரத்து செய்யப்பட்ட வரி சீர்த்திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலி நகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சுமார் 19 பேர் பலியாகி இருக்கக் கூடும் என்று அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நுழைந்த சட்டவிரோத ஆயுதக் கும்பல் வன்முறையை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பு கூறியிருக்கிறது.

தோக்கியோ, ஜப்பான்

ஜப்பானின் "பாம் பாம்" (POM POM) என்ற ஊற்சாகமூட்டும் நடனக்குழுவில் இடம் பெற்றிருக்கும், 60 முதல் 89  வயதுக்குட்ப்பட்ட மூதாட்டிகள், ஆர்வத்துடன் நடனமாடி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். ஒரு சாதாரண நடன பயிற்சியாக தொடங்கிய இந்த போம் போம் நடனத்திற்கு, தற்போது, இளம் வயதினர் போன்று மின்னும் உடையணிந்து, சிலை அலங்காரம் செய்து, அம்மூதாட்டிகள் அழகான பொழிவை ஏற்படுத்தி இருக்கின்றனர். 

-- பெர்னாமா