Friday, 27 Nov 2020
விளையாட்டு
22/11/2020 07:49 PM

பெர்லின், 20 நவம்பர் (பெர்னாமா) -- கர்ப்பிணி காற்பந்து விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதற்காக, சில சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள FIFA இணக்கம் தெரிவித்திருக்கிறது. 

கர்ப்பிணி காற்பந்து விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய FIFA இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

கர்ப்பிணி காற்பந்து விளையாட்டாளர்களுக்குக் குறைந்தது 14 வாரம் கட்டாய மகப்பேறு விடுமுறையோடு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட ஊதிய தொகையில் மூன்றில் இரண்டு பங்கினைத் தர FIFA முடிவு செய்துள்ளது. 

அதுமட்டுமின்றி, பெண் காற்பந்து விளையாட்டாளர்களும் பயிற்சியாளர்களும் தங்களின் மகப்பேறு காலத்தில் எவ்வித சிக்கல்களையும் எதிர்க்கொள்ளக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு FIFA இந்த சீர்திருத்த பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.

அதோடு, மகளிர் காற்பந்து பயிற்சியாளர்களுக்கென தனித்த சில புது விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 

''கடந்த ஆண்டு பிரான்சில் நடைப்பெற்ற, FIFA மகளிர் உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் வளர்ச்சியையும் எதிர்பாராத வெற்றியையும் தொடர்ந்து, தற்போது மகளிருக்கான உலக கிண்ண காற்பந்து போட்டி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது,'' என்று FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அதேவேளையில், புதிதாக உருவாக்கப்படும் விதிமுறைகள் பெண் காற்பந்து போட்டிக்கும் விளையாட்டாளர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சீர்த்திருத்த பட்டியல், வரும் டிசம்பர் மாதம் இறுதி முடிவுக்காக FIFA குழுவிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க