Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் வெள்ளம்: ஒருவர் பலி, நால்வரைக் காணவில்லை

26/06/2026 03:59 PM

இந்தியா, 26 ஜூன் (பெர்னாமா) -- அருணாச்சல பிரதேசம், கேயி பன்யோர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் நால்வரைக் காணவில்லை என்று, அம்மாவட்ட அதிகாரிகளை மேற்கோள் காட்டி 'தி ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீட்புக் குழுவினர் அந்தத் தொலைத் தூரப் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருள்களை விரைந்து அனுப்பினர்.

கனமழையினால் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர், குடியிருப்புப் பகுதிகளுக்குள் சேற்றையும் குப்பைகளையும் அடித்துச் சென்றது.

இதனால், வீடுகள் சேதமடைந்ததோடு, மரங்களும் வேரோடு சாய்ந்தன.

அதோடு, வாகனங்களும் வெள்ள நீரில் சிக்கிக் கொண்ட காட்சிகள் கொண்ட காணொளியை வட்டார அதிகாரிகள் வெளியிட்டிருந்தனர்.

சாலைகள் சேறும் சகதியும் நிறைந்து காணப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)