Ad Banner
Ad Banner
 உலகம்

ஸ்பெயினில் வெப்ப அலையினால் நான்கே நாட்களில் 200-க்கும் மேற்பட்டோர் பலி

26/06/2026 04:18 PM

ஸ்பெயின், 26 ஜூன் (பெர்னாமா) -- ஸ்பெயினில் ஏற்பட்ட இப்பருவத்தின் முதல் வெப்ப அலையினால், நான்கே நாட்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஞாயிறுக்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான காலக்கட்டத்தில், 45 பாகை செல்சியசுக்கும் மேல் உயர்ந்த வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய, 212-க்கும் மேற்பட்ட இறப்புகளை Madrid-டில் உள்ள கார்லோஸ் III பல்கலைக்கழகத்தின் இறப்பு கண்காணிப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது.

இந்த நான்கு நாள்களில், புதன்கிழமை மிக அதிகமான அதாவது மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட ஒரு பாதியாக 95 இறப்புகள் பதிவாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை வெப்ப அலை தொடர்பான 66 மரணங்கள் பதிவாகிய வேளையில், திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையே 38 மற்றும் 13 சம்பவங்கள் பதிவாகின.

ஸ்பெயினில் ஒவ்வோர் ஆண்டும் அதிக வெப்பநிலையால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாக அதிகாரப்பூர்வப் பதிவுகள் காட்டுகின்றன.

2025-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் வெப்பம் தொடர்பாக 3,832 மரணங்கள் பதிவாகியுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)