பி.கே.பி.டி பகுதிகளில் அரசு சாரா அமைப்பினர் அனுமதியின்றி நுழையக்கூடாது

14/09/2020 06:26 PM

அலோர் ஸ்டார், 14 செப்டம்பர் (பெர்னாமா) --நிர்வாக முறையிலான கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான P-K-P-D பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் அரசாங்க சார்பற்ற இயக்கங்கள், அப்பகுதிகளுக்கு அனுமதியின்றி செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

P-K-O-B எனப்படும் பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்திடம் அனுமதி பெற்றே அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனுசி முகமட் நோர்  அறிவுறுத்தியிருக்கிறார்.

''எப்போதும் உதவி வழங்கி வரும் அரசாங்க சார்பற்ற இயக்கங்கள், அந்த உதவி பொருட்களை PKOB-யிடம் சமர்பிக்க நான் கேட்டுக் கொள்கிறேன். தனியாக நுழைய வேண்டாம், ஏனென்றால் கட்டுப்பாடு இல்லை என்றால், அது கொவிட் -19 நோய் பரவலுக்கு உதவும். "என்றார் அவர்.

திங்கிட்கிழமை விஸ்மா டாருல் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முஹமாட் சனுசி இவ்வாறு கூறினார்.

மேலும், கோத்தா ஸ்டாரில் P-K-P-D-க்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உதவி தேவைப்பட்டால் பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். 

 - பெர்னாமா