Wednesday, 23 Sep 2020
14/09/2020 03:13 PM

நியூயார்க், 14 செப்டம்பர் (பெர்னாமா) --அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி குறித்த தகவல்களுடன் விளையாட்டுச் செய்திகள் தொடங்குகிறது... 

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆட்டத்தில், ஜெர்மனியின் அலெக்ஸான்டரைத் தோற்கடித்து  கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் ஆஸ்திரிய ஆட்டக்காரராக  டோமினிக் தீம் (DOMINIC THIEM) விளங்குகின்றார். 

உலகின் முன்னணி ஆட்டக்காரர்களே, இப்பட்டத்தை மாறி மாறி ஆக்கிரமித்து வந்த வேளையில், கடந்த  2014-ஆம் ஆண்டில், குரோஷியாவின் மெரின் கிளிச்சுக்குப்  (MARIN CILIC)  பிறகு, கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ஒரு புதிய ஆட்டக்காரராக டோமினிக் தீம் சாதனைப் படைத்திருக்கின்றார். 

ஆண்கள் பிரிவில் முன்னணி ஆட்டக்காரர்கள் இன்றி நடைபெற்ற இப்போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை, 27 வயதுடைய  டோமினிக் தீம் கைப்பற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ய இறுதி நிமிடங்கள் வரை போராடிய அவர் முதல் இரண்டு செட்களில் தோல்வி கண்டு அடுத்த மூன்று செட்களில் அலெக்ஸான்டரை வீழ்த்தி அதிர்ச்சி அலையில் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றார். 

இதனிடையே, இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண போட்டியில், டோட்டன்ஹெம் (TOTTENHAM) தொடக்க ஆட்டத்திலேயே எவெர்டன்னிடம் (EVERTON) தோல்வி கண்டிருக்கிறது. 

டோமினிக் கல்வெர்ட் லெவின் (DOMINIC CALVERT LEWIN) அடித்த ஒரே கோல், எவெர்டெனின் வெற்றியை 55ஆவது நிமிடத்தில் உறுதி செய்துள்ளது. 

அதேவேளையில், பிரான்ஸ் லீக் போட்டியில்  நடப்பு வெற்றியாளரான PSG 0-1 என்ற நிலையில்,  மார்செல்லிடம் (MARSEILLE) தோல்வி கண்டது. 

இவ்வாட்டத்தின் இறுதி நிமிடங்களில்  இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக ஐந்து ஆட்டக்காரர்கள் சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

ஞாயிற்றுக்கிழமை, இத்தாலியில் நடைபெற்ற, TUSCANY GRAND PRIX கார் பந்தைய போட்டியில், உலக பிரபலமான லெவிஸ் ஹமில்டன்  (LEWIS HAMILTAN) தமது 90-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 

7 முறை F1 வெற்றியாளர் பட்டத்தை வென்றிருக்கின்ற, பிரிட்டனின் லெவிஸ் ஹமில்டன் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால், F1 பிரிவின் சகாப்தம் MICHAELSCHUMACHER-ரின் சாதனையைச் சமன் செய்வார். 

- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க