பொது

சுல்தான் இஸ்காண்டார் வளாகத்தில் மேலும் சில சோதனை முகப்புகள்

23/08/2020 09:28 PM

புக்கிட் சாகார், 23ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத்தின் சுல்தான் இஸ்காண்டாரியாவில் உள்ள சுங்கத்துறை, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் வளாகத்தில் மலேசிய குடிநுழைவுத் துறையின் மேலும் சில சோதனை முகப்புகளை அதிகரிக்க உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அங்கு, சுமார் 40 சோதனை முகப்புகளை அதிகரிப்பதன் வழி, குறிப்பாக நாட்டின் எல்லைகள் முழுமையாகத் திறக்கப்படும் போது மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நகர்வினை விரைவுபடுத்துத்த முடியும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ  ஹம்சா ஜைனுடின் கூறினார்.

கண்காணிப்பு நடவடிக்கைகளை இன்னும் எளிதாக இருப்பதை உறுதி செய்வதுடன் அனைத்தும் வசதிகளும் தாயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு சிங்கப்பூர் தயாராக இருக்கும்போது ​​மலேசியாவும்  தயாராக இருக்க வேண்டும். 

இருநாடுகளின் எல்லைப்பகுதி சீராக திறக்கப்படும்போது முகப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டால் நிலவும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதாக உள்துறை அமைச்சு இதனை இப்போதே உத்தேசிப்பதாக ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார். 

இதனிடையே, தாம்பாக் ஜோகூரில் பணி நிமித்தமாக அதிகாரப்பூர்வ பயணங்கள் மேற்கொள்வது, ஆர்.ஜி.எல் மற்றும் பெர்மிட் மூலமாக வேலைக்கும் செல்வது, பி.சி.ஏ ஆகிய திட்டத்தின் கீழ் எல்லைக் கடந்து கொண்டுச் செல்லும் மலேசிய பாதசாரிகளுக்கு இலவச பேருந்து சேவையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்
ஜோகூர் பொது போக்குவரத்து அமைப்பின் முயற்சியை ஹம்சா பாராட்டினார். 

-- பெர்னாமா