அரசியல்

புதிய இயல்பு முறையில் சினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்

03/07/2020 10:15 PM

சினி, 3 ஜூலை (பெர்னாமா) -- பகாங், சினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான 14 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அமல்படுத்தப்படும் புதிய இயல்பு முறையில் அத்தொகுதி வாக்காளர்கள் நாளை வாக்களிக்க இருக்கின்றனர். 

காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தலில், 13 வாக்களிப்பு மையங்களில் சுமார்  20,816 வாக்காளர்கள் தங்களின் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுவர்.

இந்நிலையில், நாளை வாக்களிப்பு தினத்தில், மாநில மற்றும் மாவட்ட எஸ்.பி.ஆர் தேர்தல் அதிகாரிகள், அரச மலேசிய போலீஸ் படை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட 838 பேர் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இடைத்தேர்தல் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க, புதிய இயல்பு முறையில் நடத்தப்படும் இந்த தேர்தல் தனித்தன்மையும் வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்றுமாகும்.

அதேவேளையில், தொடுகை இடைவெளியைப் பின்பற்றும் பொருட்டு நெரிசலைக் குறைக்க, வாக்காளர் அட்டையில் இருக்கும் நேரத்தை பின்பற்றுமாறு, தேர்தல் பொறுப்பாண்மைக் குழு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டது.

-- பெர்னாமா