Thursday, 02 Jul 2020
30/06/2020 07:43 PM

புத்ராஜெயா, 30 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் இன்று நண்பகல் வரை, இரண்டு கொவிட்-19 புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகி இருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து, நாட்டில் மொத்தம் 8,639 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. 

இதுவரை, இந்நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 164-ஆக பதிவாகி இருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவாகிய இரண்டு சம்பவங்களில், ஒரு சம்பவம் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவரை உட்படுத்தியது என்றும் மற்றொரு சம்பவம் உள்நாட்டிலேயே பரவியது என்றும் டாக்டர் நோர் ஹிஷாம்  இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 

இவ்விருச் சம்பவங்களும் மலேசியரை உட்படுத்தியதாகும்.

இன்று அந்நிய நாட்டினரை உட்படுத்தி எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நோய் காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நால்வரில் ஒருவருக்கு சுவாச கருவியின் உதவி தேவைப்படுகிறது. 

அதோடு, நாட்டில் இன்று கொவிட் 19 நோயினால் எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவு செய்யப்படாததைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 121-ஆக நீடிக்கிறது. 

இதனிடையே, கொவிட்-19 நோயாளிகளில் இன்று 20 பேர் குணமடைந்து வீடுத் திரும்பியதைத் தொடர்ந்து நாட்டில் மொத்தம் 8,354 பேர் குணமடைந்திருக்கின்றனர்.

இது, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், 96.7 விழுக்காடாகும்.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க