விளையாட்டு

சில விளையாட்டுகளுக்கு விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது

09/06/2020 04:14 PM

கோலாலம்பூர், 9 ஜூன் (பெர்னாமா) -- நாளை, புதன்கிழமை தொடங்கி மீட்பு நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலுக்கு வரவிருப்பதைத் தொடர்ந்து, சில விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.  

விளையாட்டு வீரர்கள், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-களையும் முறையாகப் பின்பற்றும்படி, மலேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் நோர்ஜா ஜக்காரியா வலியுறுத்தி இருக்கிறார். 

இந்த நோய்த் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி துறையைச் சார்ந்த அனைவரும் சுய கட்டுப்பாடு மற்றும் சிறந்த ஆளுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அதே வேளையில், நாட்டின் விளையாட்டு நடவடிக்கைகளைப் புதுப்பிக்கும் அரசாங்கத்தின் முடிவை, முகமட் நோர்சா வரவேற்றிருக்கிறார்.

நாளை புதன்கிழமை தொடங்கி PKPP அமலுக்கு வரவிருப்பதைத் தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கடுமையாக்கப்பட்ட எஸ்.ஓ.பி-க்கு தகுந்தவாறு இணங்கி செயல்படுவதற்கு, சில விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருந்தார்.  

-- பெர்னாமா