பொது

கொவிட்-19: எஸ்.ஓ.பி-யின் அமலாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்

02/06/2020 09:52 PM

புத்ராஜெயா, 2 ஜூன் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய்த் தொற்றிற்கு பிந்திய திட்டம் அல்லது வெளியேறும் வியூக முறையை அமல்படுத்த, நாடு தயாராக இருந்தால், சட்டம் 342 அல்லது 1988-ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டத்தின் கீழுள்ள செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-யின் அமலாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். 

புதிய கொவிட்-19 நோய் சம்பவங்கள், ஒன்று அல்லது இரண்டு இலக்க எண்களாக தொடர்ந்தால் அல்லது புதிய சம்பவங்களின் திடீர் அதிகரிப்பு இல்லாவிட்டால், இன்னும் அதிகமான பொருளாதாரத் துறைகள், சட்டம் 342-டின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பின் கீழ் மீண்டும் செயல்படத் தொடங்கலாம் என்றும் அவர் கூறியிருக்கின்றார். 

இதனிடையே, சில வர்த்தக வளாகங்கள் தற்போது மலிவு விற்பனையை மேற்கொண்டு வருவது குறித்து கருத்துரைத்த, டாக்டர் நோர் ஹிஷாம், பொதுமக்களின் நெரிசலை தவிர்க்க, அதன் உரிமையாளர்கள் எஸ்ஓபி-யை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் நினைவுறுத்தி இருக்கின்றார். 

-- பெர்னாமா