விளையாட்டு

பண்டஸ்லீகா: டொர்ட்மண்ட், பேடர்போர்னை தோற்கடித்தது

01/06/2020 02:23 PM

படார்போர்ன், 1 ஜூன் (பெர்னாமா) -- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெர்மனி பண்டஸ்லீகா கிண்ணப் போட்டியின் ஆட்டமொன்றில், போருசியா டொர்ட்மண்ட்  6-1 என்ற கோல்களில் பேடர்போர்னை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம், 60 புள்ளிகளுடன், போருசியா டொர்ட்மண்ட் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

விருவிருப்பாகத் தொடங்கிய ஆட்டத்தில், இரு குழுக்களுமே கோல்கள் போடுவதில் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஆட்டத்தின் 54 மற்றும் 57 நிமிடங்களில் இரு கோல்களை அடித்து, போருசியா டொர்ட்மண்ட் முதல் பாதி ஆட்டத்தை முடித்துக் கொண்டது. 

முதல் பாதி ஆட்டம் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் முடிவடைய, இரண்டாம் பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் பேடர்போர்ன் ஒரு கோலை அடித்தது. 
 
அதன் பிறகு, 74, 85, 89 மற்றும் 92-வது நிமிடங்களில் நான்கு கோல்களை அடித்து, போருசியா டொர்ட்மண்ட் 6-1 என்ற கோல்களில் இவ்வாட்டத்தில் வெற்றி பெற்றது. 

-- பெர்னாமா