வழக்கமான மற்றும் ஷரியா முறையிலான ஒப்பந்தக் கடனின் மாதக் கட்டணத்தில், கூடுதல் கட்டணம் இல்லை

06/05/2020 07:33 PM

புத்ராஜெயா, 06 மே (பெர்னாமா) -- வழக்கமான மற்றும் ஷரியா முறையிலான ஒப்பந்தக் கடனின் மாதக் கட்டணத்தில், கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது. 

இந்த விவகாரம் தொடர்பில், வங்கி தொழிற்துறையுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சாஃபூருல் தெங்கு அப்துல் அசிஸ்  தெரிவித்திருக்கிறார். 

கடன் பெற்றவர்களின் மாதாந்திர தவணைக் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்று அச்சந்திப்பில் முடிவுச் செய்யப்பட்டதாக இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெங்கு சாஃபூருல் கூறினார். 

ஆகவே, இந்த கடன் ஒத்திவைப்பு காலக்கட்டத்தில் மாதக் கட்டணத்தில் கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.

கடன் பெற்றவர்கள் தங்களது வங்கியுடனான ஒப்பந்த விதிமுறைகளின்படி வழக்கமான தவணைக் கட்டணத்தை செலுத்தலாம். 

கடன் ஒத்திவைப்பை தேர்வுச் செய்திருந்தால் நிதி அட்டவணையில், கூடுதல் 6 மாதங்கள் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேல் விவரங்களுக்கு, கடன் பெற்றவர்கள் தங்களது வங்கியை தொடர்புக் கொள்ளலாம். 

இந்த சவால்மிக்க காலக்கட்டத்தில் இம்முடிவு, பொதுமக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க வகை செய்யும் என்று தாம் நம்புவதாக தெங்கு சாஃபூருல்
தெரிவித்தார். 

-பெர்னாமா