உலகம்

ஸ்பெயின் நாட்டில், சவப் பெட்டிகளைத் தயாரிப்போர் திக்கு முக்காடி வருகின்றனர்.

04/04/2020 04:10 PM

மெட்ரிட், 04 ஏப்ரல் [பெர்னாமா] -- ஸ்பெயின் நாட்டில், சவப் பெட்டிகளைத் தயாரிப்போர் திக்கு முக்காடி வருகின்றனர்.

அந்நாட்டில், கொவிட்-19-துக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கானோர் மரணமடைந்து வருவதால், சவப் பெட்டிகள் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.

அத்தேவையை உடனுக்குடன் ஈடுபட்ட முடியாத நிலைக்கு ஸ்பெயின் தள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களில், ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் கொவிட்-19 நோக்குப் பலியாகி வருவோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.

இந்நோய்ப் பரவியது முதல், தமது நிறுவனம் நான்காயிரம் சவப் பெட்டிகளைத் தயாரித்து மருத்துவமனைகளுக்கு விநியோகித்திருப்பதாகவும் இதர சவப் பெட்டி உற்பத்தியாளர்கள் இதைவிடக் கூடுதலாக விநியோகித்திருப்பதாகவும் சவப்பெட்டி தயாரிப்பாளர் மரியா சாவ் என்பவர் கூறுகின்றார்.

ஸ்பெயினில் சில நாட்களில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் ஸ்பெயினில் 932 பேர் பலியாகி இருக்கின்றனர்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய்க் கிருமித் தொற்றியும் இருக்கிறது.

-- பெர்னாமா