பொது

செர்டாங், MAEPS-சில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கும் மண்டபங்களை, பிரதமர் பார்வையிட்டார்

30/03/2020 08:07 PM

செர்டாங், 30 மார்ச் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் சம்பவங்களை சமாளிப்பதற்காக, செர்டாங், MAEPS-சில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கும் மண்டபங்களை, பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின், இன்று சென்று பார்வையிட்டிருக்கிறார். 

MAEPS-சில் இருக்கும் ஏ மற்றும் பி மண்டபங்கள், கொவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றியமைக்கப்படுகின்றன. 

வரும் ஏப்ரல் மாத மத்தியில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாற்றியமைக்கப்படும் இம்மையத்தின் பணிகள், ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. 

இம்மையத்தின் ஏ மண்டபத்தில் 400 கட்டில்களும் பி மண்டபத்தில் 200 கட்டில்களுமாக மொத்தம் 600 கட்டில்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 

-- பெர்னாமா