உலகம்

கொவிட்-19 நோய், அமெரிக்காவை கடுமையாகத் தாக்கி வருகிறது

28/03/2020 08:14 PM

வாஷிங்டன் 28 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 நோய், அமெரிக்காவை கடுமையாகத் தாக்கி வருகிறது.

அங்கு,  தற்போது ஒரு லட்சத்து நான்காயிரத்து 256 பேருக்கு, இந்நோய்த் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேவேளையில், ஆயிரத்து 704 பேர் இந்நோயினால் உயிரிழந்திருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை மட்டும், அங்கு 15 ஆயிரம் புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் வேளையில், 300 மரணச் சம்பவங்களும் பதிவாகி இருக்கின்றன.

இந்நிலையில், அங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களும் தாதியர்களும் போராடி வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்நாடு பல தீவிர பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

-- பெர்னாமா