Tuesday, 07 Apr 2020
பொது
26/03/2020 03:55 PM

கோத்தாகினபாலு, 26 மார்ச் [பெர்னாமா] -- நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் இருந்து பாதுகாப்புப் பணியாளர்களைத் தடுத்ததாக, சபா, கோத்தாகினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது.

சபாவில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய முதல் இருவராகிய இவர்களுக்கு அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

அவர்களில் ஒருவரும் உணவகப் பணியாளருமான 26 வயதுடைய யோங் ஷி ஹோவ் என்பவருக்கு மாகிஸ்டிரேட் ஸ்டெப்பனி ஷேரோன் அபி, 10 மாத சிறை தண்டனையை விதித்தார். 

மற்றொருவரான 33 வயதுடைய இஞ்ஜிமார் அபு கஃபார் என்பவருக்கு ஆறாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 10 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்டெப்பனி உத்தரவிட்டார்.

நேற்று புதன்கிழமை பின்னிரவு 1.30 மணியளவில் ஜாலான் கம்போங் செண்டெராகாசேவுக்கும் ஜாலான் புக்கிட் பெண்டேராவுக்கும் இடையிலான சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரைக் கடமையைச் செய்வதிலிருந்து தடுத்ததாக யோங் ஷி ஹோவ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மற்றொரு நிலவரத்தில், ஜாலான் துவாரான் பத்து 7-வில் உள்ள இனானாம் என்ற பகுதியில் திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கடமையைச் செய்யவிடாமல் துரத்தியதாகச் சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் இஞ்ஜிமார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க