வெனிசுவேலா, 27 ஜூன் (பெர்னாமா) -- புதன்கிழமை வெனிசுவேலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3,360 பேர் காயமடைந்துள்ளதாக வெனிசுவேலா தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
இப்பேரிடரில், 172 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், 3,007 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ரோட்ரிக்ஸ் கூறினார்.
காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அகப்பக்கத்தின் வழி, வெள்ளிக்கிழமை நண்பகல் வரை, 50,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலநடுக்கங்களால் 13 மருத்துவமனைகள், 25 வணிக மையங்கள் உட்பட 383 கட்டிடங்களும் இதர 1,002 வசதிகளும் சேதமடைந்ததன.
வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை, நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக அனைத்துலக மீட்புப் பணியாளர்கள் 871 பேர் அந்நாட்டை வந்தடைந்துள்ளதாக ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
இதனிடையே, இன்னும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அகப்பக்கத்தின்படி, வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி, இப்பேரிடரினால் 50,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் அவசரமாகத் திரட்டப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, லா குவைரா மாநிலத்தில் உள்ளூர் மருத்துவ வசதிகள் பற்றாக்குறையைத் தீர்க்க உதவும் வகையில், இராணுவம் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைத்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கார்லோஸ் அல்வராடோ தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)