Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளிக்கான நிரந்தர நிலப்பட்டா பெறப்பட்டது

09/06/2026 08:03 PM

கோலா குபு பாரு, 09 ஜூன் (பெர்னாமா) -- இன்று காலை சிலாங்கூர், கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளிக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கிய கூடுதல் 0.55 ஏக்கர் நிலத்திற்கான ஒப்புதல் கடிதத்தையும் வோங் கா வோ வழங்கினார். 

''நில நிரந்தர உரிமைக்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது நிரந்தர நில உரிமை. அதாவது 24, 823 சதுர அடி பரப்பளவிற்கான நிலம்,'' என்றார் அவர்.  

அக்கூடுதல் நிலத்தில் பொது மண்டபம் கட்டுவதற்கு பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி பாஸ்கரன் தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, அப்பள்ளி சிற்றுண்டிச்சாலையின் கூரை, கழிப்பறை உள்ளிட்ட இதர சீரமைப்புப் பணிகளுக்காக கல்வி அமைச்சு 1 லட்சம் ரிங்கிட் நிதியை வழங்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

இதனிடையே, 20 ஆண்டுகால போராட்டத்தின் தொடக்க நாளிலிருந்தே தமது தொடர் பங்களிப்பை அளித்து, நிரந்தர நிலப்பட்டாவை பெற்றுத் தர பெரும் பங்காற்றிய சமூக ஆர்வலர் டத்தோ பி. எஸ். சாமியின் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

221 மாணவர்கள் பயிலும் எட்டு வகுப்பறைகள் கொண்ட கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளிக்கு, சிலாங்கூர் மாநில அரசாங்கமும் இன்று 60,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]