Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

இரு தலைவர்களும் சந்திப்பு நடத்தாவிட்டால் போரை தொடர கீவ் தயார்

05/06/2026 03:35 PM

உக்ரேன், 05 ஜூன் (பெர்னாமா) -- ரஷ்யா - உக்ரேன் இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும்.

இல்லையெனில், போரைத் தொடர்வதில் கீவ் தயாராக இருப்பதாக எச்சரித்து, நேற்று உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடிதினுக்கு ஒரு பகிரங்க கடித்ததை அனுப்பியுள்ளார்.

அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கும் அக்கடிதம் அனுப்பப்பட்டதாக உக்ரேன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

உக்ரேனின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள், பணவீக்கம், எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றால் ரஷ்ய மக்கள் சோர்வடைந்திருப்பதோடு, அமைதிக்குத் தயாராக இருப்பதாகவும், அவ்வறிக்கையில் செலென்ஸ்கி குறிப்பிட்டார். 

ஈரானில் நிலவும் மோதல்கள் மீது அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதால், ஐரோப்பாவில் நடக்கும் போர் மீண்டும் அதன் கவனத்தின் மையத்திற்கு வரும் வரை வெறுமனே காத்திருப்பது தவறு என்று அவர் கூறினார். 

அதோடு, அரசதந்திரம் தொடங்க வேண்டிய களம் என்பதால் அமைதிக்கான பாதை போர்க்களத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று அந்த அறிக்கையின் மூலம் செலென்ஸ்கி வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தை முடியும் காலம் முழுவதும் முழுமையான போர்நிறுத்தத்தை உக்ரேன் ஆதரிக்கும் நிலையில், இது ஓர் வழக்கமான நடைமுறை என்று அவர் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]