புத்ராஜெயா, 03 ஜூன் (பெர்னாமா) -- கத்திக்குத்து காயங்களால் ஆளானவரை உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கைவிலங்கிடப்பட்டு கொல்லப்பட்ட ஹென்றி நோவாக்கின் கொலையைக் கண்டித்து, சௌத்தாம்ப்டனில் நூற்றுக்கணக்கானோர் கூடினர்.
சௌத்தாம்ப்டன் மத்திய காவல் நிலையத்திற்கு வெளியே தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் சம்பவ இடத்திற்கு அருகே பேரணியாக தொடரப்பட்டு போலீசாருடன் மோதலில் முடிவடைந்தது.
போராட்டக்காரர்கள் போலீசார் மீது செங்கற்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் பிற பொருட்களை வீசிய வேளையில், அதற்குப் பதிலடியாக, போலீசார் மிளகுத் தெளிப்பானையைப் பயன்படுத்தியும், கலவரத் தடுப்புக் கேடயங்களைக் கையாண்டும் அவர்களைத் தடுத்தனர்.
18 வயது மாணவர் ஒருவர் இனவெறித் தாக்குதல் நடத்தியதாக, அவரைக் கொலைச் செய்தவர் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, கத்திக்குத்து காயங்களால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அம்மாணவரை போலீசார் கைவிலங்கிட்ட சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் போலீசார் நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் தெற்கு இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டன் நகரில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் ஹென்றி நோவாக் உயிரிழந்தார்.
நொவாக் தன்னைத் தாக்கியதாக அப்போது போலீசாரிடம் பொய் கூறிய, 23 வயதான சீக்கியரான கொலையாளி விக்ரம் திக்வாவுக்கு, கடந்த திங்கட்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)