Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எரிசக்தி மாற்ற செயல்திட்ட முன்னேற்றத்தில் வலுவான உத்வேகம்

03/06/2026 05:39 PM

கோலாலம்பூர், ஜூன் 03 (பெர்னாமா) -- 2026 எரிசக்தி மாற்ற மாநாடு, ETCon26-இன் தொடக்க நாளின்போது பல முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் அங்கீகாரங்களும் பரிமாறப்பட்டது எரிசக்தி மாற்ற செயல்திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு வலுவான உத்வேகத்தைக் குறிப்பதாக அமைந்தது.

இந்த பரிமாற்ற விழாவை, TNB-இன் தலைவரும், தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ ஷம்சுல் அஹ்மட்டுடன் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத்தின் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் ஆகியோர் பார்வையிட்டனர்.

மின்கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கும் வகையில், மலேசியாவின் “முதல் மின்கட்டமைப்பு உருவாக்கும் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட BESS திட்டம்” என்று அங்கீகரிக்கப்பட்ட, திரெங்கானு, Santong-கில் சமீபத்தில் தொடங்கப்பட்ட TNB-யின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு, BESS திட்டத்திற்கு மலேசிய சாதனைப் புத்தகத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

100 மெகாவாட்/400 மெகாவாட்-மணி திறன் கொண்ட இந்த நிலையம், 2026 ஏப்ரல் 16ஆம் தேதி திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே செயல்பாட்டிற்கு வந்தது. 

இது மலேசியாவின் மின்கட்டமைப்பு நவீனமயமாக்கல் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவதோடு, பெரிய அளவிலான மின்கல சேமிப்புத் திட்டங்களை வணிக அளவில் செயல்படுத்தும் நாட்டின் திறனையும் வலுப்படுத்துகிறது.

இத்திட்டம் சுமார் 40,000 வீடுகளின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது.

திரெங்கானுவின் கெஞ்ரில் உள்ள கலப்பின நீர் மிதவை சூரியசக்தித் திட்டத்திற்காக, TNB பவர் ஜெனரேஷன் நிறுவனம், திரெங்கானு இன்கார்பரேட்டட் நிறுவனம், Cypark Renewable Energy நிறுவனம் மற்றும் Fabulous Sunview நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கி சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், ஒப்பந்தம் மற்றும் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் மற்றும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்பட்டது மற்றொரு முக்கிய மைல்கல்லாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)