கோலாலம்பூர், ஜூன் 03 (பெர்னாமா) -- அரசு நிறுவனங்கள், உபகரணங்கள், மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய எரிசக்தி மதிப்புச் சங்கிலி முழுவதுமான வலுவான ஒத்துழைப்பு புதிய வாய்ப்புகளைத் திறப்பதற்கும் பெரிய அளவில் எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் முக்கியமானதாக இருக்கும்.
கொள்கை திசையை வகுப்பதில் அரசாங்கங்கள் முக்கிய பங்கு வகித்தாலும், பெரிய அளவிலான எரிசக்தி மாற்ற முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதில் தனியார் துறை தொடர்ந்த்து முக்கியப் பங்காற்றுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.
"மலேசியாவில், தேசிய எரிசக்தி மாற்றத்திற்கான செயல்திட்டம் போன்ற வழிமுறைகள் குறித்து முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலத் தெளிவு கிடைப்பதற்கு என்ன தேவை என்பதை அரசாங்கம் தொடர்ந்து தெளிவாகத் தெரிவித்து வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையைச் செயல்வடிவங்களாக மாற்றுவதற்கு, பங்காளிகளிடமிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கமும் அர்ப்பணிப்புமே இப்போது தேவைப்படுகிறது,'' என்றார் அவர்.
Tenaga Nasional நிறுவனம், TNB ஏற்பாடு செய்திருந்த எரிசக்தி மாற்ற மாநாடு 2026, ETCon26-இல் உரையாற்றிய டத்தோ ஶ்ரீ ஃபடில்லா, மலேசியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழிநடத்திய அதே உத்வேகத்துடன் எரிசக்தி மாற்றத்தையும் அணுக வேண்டும் என்று கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)