Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிகரிக்க தேமு எண்ணம்

03/06/2026 05:24 PM

புத்ராஜெயா, ஜூன் 03 (பெர்னாமா) -- வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் பங்கேற்பை தக்க வைத்துகொள்ள அல்லது அதிகரிக்க தேசிய முன்னணி எண்ணம் கொண்டுள்ளது.

தேசிய முன்னணி அரசியல்வாதிகளில், அதிகபட்சம் பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மாநிலம் என்ற சாதனையை ஜோகூர் இருப்பதால் அவ்வாறு எண்ணம் கொண்டுள்ளதாக அதன் மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் நோரைனி அஹமட் கூறினார்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அரசியல்வாதிகள் தற்போது ஜோகூரில் சுமார் 25 முதல் 26  பேர் உள்ளதாகவும் அம்னோ மகளிர் பிரிவு தலைவியாகவும் அவர் தெரிவித்தார்.

"தேசிய முன்னணி பெண்களாகிய நாங்கள், பெண் வேட்பாளர்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறோம். ஏனென்றால், தற்சமயம், அதிக எண்ணிக்கையிலான தேசிய முன்னணி பெண் வேட்பாளர்களைக் கொண்ட மாநிலங்களில் ஜோகூரும் ஒன்றாகும்,'' என்றார் அவர்.

அடுத்த தேர்தலில் பெண் வேட்பாளார் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து கருத்துரைத்த அவர், இவ்விவகாரம் மாநில மந்திரி புசார்  Datuk Onn Hafiz Ghazi மற்றும் அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி ஆகியோருடன் விவாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)