Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்; தே.மு. வேட்பாளர் பட்டியல் மதிப்பீட்டுக் கட்டத்தில் உள்ளது

02/06/2026 06:24 PM

கோலா திரெங்கானு, 02 ஜூன் (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல், இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் தற்போது மதிப்பீட்டுக் கட்டத்தில் உள்ளது.

அப்பட்டியலை ஜோகூர் மந்திரி புசார், டத்தோ ஓன் ஹபிஸ் காஸி சமர்ப்பித்துள்ளதாகவும், தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடியப் பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அதன் தலைவர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''ஜோகூரில் அமைக்கப்பட்ட அரசாங்கம், தேசிய முன்னணியில் ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைவதற்கு முன்பே நிறுவப்பட்ட ஒரு தேசிய முன்னணி அரசாங்கம் என்ற விளக்கத்தை நான் திருத்த விரும்புகிறேன். எனவே, அதுவே முந்தைய மாநில மக்கள் தேர்வின் அடிப்படையாகும். அவர்கள் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்,'' என்றார் அவர்.

இன்று, கோலா திரெங்கானுவில் 2026 பூமிபுத்ரா தொழில்முனைவோர் பொருளாதார மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய டாக்டர் அஹ்மாட் சாஹிட், ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியின் ‘போஸ்டர் போய்’-ஆக ஓன் ஹபிஸ் இருப்பார் என்பதை உறுதிப்படுத்தினார்.

மேலும், 2022 மாநிலத் தேர்தலில் பெற்ற சாதனையை முறியடிக்கும் வகையில், இம்முறை 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதில் தேசிய முன்னணி உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)