Ad Banner
Ad Banner
 பொது

கோலாலம்பூரில் சாலை விபத்து; ஓய்வுபெற்ற இராணுவ வீரர் பலி

27/05/2026 05:24 PM

கோலாலம்பூர், 27 மே (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை கோலாலம்பூர் ஜாலான் கம்போங் பண்டானில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்தார்.

காலை மணி 8.30 அளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் யமஹா 135 எல்.சி ரக மோட்டார் சைக்கிளும், BMW ரக காரும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஏ.சி.பி முஹமட் சம்சுரி முஹமட் இசா தெரிவித்தார்.

45 வயதான அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சாலை சந்திப்பிலிருந்து வெளியேறிய காரின் வலது பக்கத்தில் மோதுவதற்கு முன்னர் இடது பக்க பாதையில் நேராகச் சென்றது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவ்விபத்தினால், தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்த அந்நபர் தொடர் சிகிச்சைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், சிகிச்சையின்போது அவர் உயிரிழந்தார்.

BMW கார் ஒட்டுநர் மற்றும் இதர பயணிகளுக்குக் காயங்கள் ஏற்படவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)