இங்கிலாந்து, 25 மே (பெர்னாமா) -- அனைத்து கிளப்களும், இன்று அதிகாலையில் தங்களின் 38-வது ஆட்டத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரீமியர் லீக் கிண்ணத்தின் பருவம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
இந்தப் பருவத்தில் சந்தேகமின்றி கவனம் ஈர்த்த அணியாக இருந்தது வெற்றியாளரான ஆர்சனல்தான்.
கிண்ணத்தை வென்றது மட்டுமல்லாமல், Crystal Palace-சை 2-1 என்ற கோல்களில் வீழ்த்தி இந்தப் பருவத்தையும் சிறப்பாக அவ்வணி நிறைவு செய்தது.
செல்ஹர்ஸ்ட் பார்க் அரங்கில் நடந்த ஆட்டத்தின்போது முன்னதாகவே வெற்றியாளர் பட்டத்தை உறுதி செய்திருந்த ஆர்சனல் வீரர்கள் அரங்கினுள் நுழைந்தபோது Crystal Palace 'மரியாதை அணிவகுப்பு' நடத்தி அவ்வணிக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னணி ஆட்டக்காரர்கள் சிலர் அதில் விளையாடாத போதிலும், கேப்ரியல் ஜிசஸ் மற்றும் நோனி மடுவெகே அடித்த இரண்டு கோல்கள், ஆர்சனலுக்கு ஓர் அர்த்தமுள்ள வெற்றியைப் பெற்றுத் தரப் போதுமானதாக இருந்தது.
பின்னர், ஆர்செனல் அணியின் கேப்டன் மார்தின் ஒடெகார்ட், லீக் கிண்ணத்தைப் பெருமையுடன் வாங்கி கம்பீரத்தில் உயர்த்திப் பிடித்தார்.
இதன்மூலம், தங்கள் அணி மீண்டும் வெற்றியாளர் ஆவதைக் காண 22 ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு அது மறக்க முடியாத தருணமானது.
மைகல் அர்டெடா தலைமையிலான அணி தற்போது வரும் மே 30 அன்று நடைபெறும் வெற்றியாளர் லீக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான பி.எஸ்.ஜி-ஐ எதிர்கொள்வதில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.
அதேவேளையில், ஆர்சனல் கிளப் நிறுவப்பட்டதிலிருந்து ஐரோப்பிய பட்டத்தை வெல்ல ஆர்சனல் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)