Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

எபோலா: 10 ஆப்பிரிக்க நாடுகள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன

24/05/2026 07:55 PM

காங்கோ, 24 மே (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா நோய் பரவியதைத் தொடர்ந்து, இந்த நோய்தொற்றால் பத்து ஆப்பிரிக்க நாடுகள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன.

ருவாண்டா, கென்யா, தன்சானியா, அங்கோலா, புரூண்டி , மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, தெற்கு சூடான் மற்றும் சாம்பியா ஆகிய பத்து நாடுகள் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக, ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்,CDC நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவசரகால பதில் நடவடிக்கைகளுக்காக 31 கோடியே 40 லட்சம் ரிங்கிட் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதி உதவி வேண்டுகோளை CDC-உம், உலக சுகாதார நிறுவனமும்  அறிவித்துள்ளன.

அதில், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு ஆகியவற்றிற்காக காங்கோ மற்றும் உகாண்டாவிற்கு பெரும்பான்மையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், அதிக அபாயம் உள்ள எஞ்சிய 10 நாடுகள் 5 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலரை பகிர்ந்து கொள்வார்கள் என்று CDC தெரிவித்தது.

இதனிடையே, மே 15-ஆம் தேதி காங்கோ ஜனநாயக குடியரசின் Ituri மாகாணத்தில் எபோலா நோய் பரவியதைத் தொடர்ந்து, நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

இந்நோய்தொற்று தற்போது வட மற்றும் தெற்கு கீவு மாகாணங்களுக்கு பரவியுள்ளது.

இதுவரை, சந்தேகத்திற்கிடமான 750 சம்பவங்களும், 177 மரணங்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக, WHO-வின் தரவுகள் காட்டுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)