Ad Banner
Ad Banner
 பொது

விநியோக நெருக்கடியைச் சமாளிக்க கவனம் செலுத்தப்படுகிறது

19/05/2026 07:32 PM

கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா) --  உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள விநியோக நெருக்கடியைச் சமாளிக்க. அரசாங்கம் தற்போது தேசிய தயார்நிலை, கொள்கைகளின் துல்லியம், செயலாக்கத் திறன் மற்றும் உதவிப் பொருள் விநியோகத்தில் நேர்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பாக, உணவு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட விநியோகத்தை உறுதி செய்வது உள்ளிட்ட நான்கு முன்னுரிமைகளின் அடிப்படையில், இந்நெருக்கடியை அரசாங்கம் தொடர்ந்து நிர்வகித்து வருவதாக அக்மால் நஸ்ருல்லா தெரிவித்தார்.

முதலாவதாக, நாம் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். குறிப்பாக உணவு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள். இரண்டாவதாக, மானிய நிர்வாகம், கசிவுக் கட்டுப்பாடு மற்றும் அமலாக்கம் ஆகியவற்றின் மூலம் தற்போதுள்ள விநியோகத்தை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும்.

பையோடீசல் நிலையான எரிபொருட்கள் மற்றும் மாற்று மூலங்கள் உள்ளிட்ட புதிய வாய்ப்புகளையும் அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)