Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சமூக ஒழுக்கச் சீர்கேட்டைத் தடுக்கும் முதன்மை அரணாகிறது மனிதநேயமும் ஆசிரியர்களின் அன்புணர்வும்

16/05/2026 05:21 PM

ஈப்போ, 16 மே (பெர்னாமா) -- சமூகத்தில் அதிகரித்து வரும் ஒழுக்கச் சீர்கேடும் வெறுப்புணர்வு கலாச்சாரமும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனில், கற்றல் சூழலில் நற்பண்புகள், நல்லொழுக்கம் மற்றும் அன்பின் கூறுகள் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக திறமையான தலைமுறையை உருவாக்கிய போதிலும், மனிதநேயப் பண்புகள் இல்லாமல் போனால், அந்த நாட்டின் முன்னேற்றத்திள் எவ்வித அர்த்தமும் இருக்காது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

''அது அவர்களின் மனசாட்சியைத் தொடவில்லை; மனிதர்களாக அவர்களின் உள்ளத்தைக் கவரவில்லை; வெளியில் உள்ள பிள்ளைகளும் குடும்பங்களும் அனுபவிக்கும் வேதனையை உணரச் செய்யவில்லை. அதனால், நாம் ஏன் கல்வி கற்பிக்கிறோம்? யாருக்குக் கல்வி கற்பிக்கிறோம்? நாம் மனிதர்களுக்குக் கல்வி கற்றால், தூய பண்புகள், நன்னெறி பண்புகள் ஆகியவை இருக்க வேண்டும். இதுதான் அறநெறி அல்லது மனிதாபிமானம் என்று கருதப்படுகிறது, ஆனால் அது எதுவுமே இல்லை,'' என்றார் அவர்.

இதற்கிடையில், ஆசிரியர்களின் நலனில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், மடானி அரசின் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் முக்கிய ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குள் 8,700 ஆசிரியர் குடியிருப்புகளை பராமரிக்கும் முதல் கட்டப் பணிகளுக்காக, 30 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, 3,500 பள்ளிகளில் ஆசிரியர் அறைகள் மேம்படுத்தப்படவுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)