Ad Banner
Ad Banner
 பொது

தேசிய விளையாட்டு வீரர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்வார்

19/05/2026 08:22 PM

கோலாலம்பூர் , 19 மே (பெர்னாமா) --  தற்போதைய உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொண்ட போதிலும், நாட்டின் விளையாட்டு வீரர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதோடு, விளையாட்டு நடவடிக்கைகளின் தொடர்ச்சியும் உறுதி செய்யப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு-KBS, தேசிய விளையாட்டு மன்றம்-MSN மற்றும் அது தொடர்புடைய சங்கங்கள், பயனற்ற விஷயங்களைக் காட்டிலும் விளையாட்டு வீரர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர்
 டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  வலியுறுத்தினார்.

ஆனால் முன்பு, சில நேரங்களில் விளையாட்டு சங்கங்களின் கவனம் வேறு சில விஷயங்களில் இருந்ததால் நாம் மோதிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
வழக்கத்திற்கு மாறான ஆடைகள் அணிதல், விமான பயண மற்றும் பல இருந்தன. இதனால், விளையாட்டு வீரர்களின் நலன் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. இப்போது நாம் வலியுறுத்துவது என்னவென்றால், நாட்டின் விளையாட்டையும் தடகளத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றால், முதன்மையான கவனம் விளையாட்டு வீரர்களின் நலனிலேயே இருக்க வேண்டும். அதுவே முதல் முக்கியக் காரணமாகும்

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 தேசிய விளையாட்டு விருது விழாவில் உரையாற்றும்போது. Datuk Seri Anwar அதனைத் தெரிவித்தார்.

மேலும், KBS மற்றும் MSN மேற்கொண்ட செலவுக் குறைப்பு நடவடிக்கைகளைப் பாராட்டிய பிரதமர், விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் தரமான பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதை தாம் விரும்புவதாகவும் கூறினார்.