Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இத்தாலி பொது டென்னிஸ் போட்டி; அரையிறுதியில் சின்னர்

15/05/2026 07:01 PM

இத்தாலி, 15 மே (பெர்னாமா) --  இத்தாலி பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு உலகின் முதல் நிலை வீரரான யானிக் சின்னர் முன்னேறினார்.

களிமண் தரையில் தனது ஆதிக்கத்தைத் தொடரும் அவர் காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஏண்ரி ரூப்லெவ்வை நேரடி செட்களில் வீழ்த்தினார்.

நேற்று நடைபெற்ற இந்த காலிறுதியில் சொந்த மண்ணில் விளையாடிய யானிக் சின்னர் 1000-வது மாஸ்டர்ஸ் தொடரில் தொடர்ச்சியான வெற்றிகளால் புதிய சாதனையையும் படைத்திருக்கின்றார்.

இதன்வழி, நோவக் ஜோகோவிச்சின் நீண்டகால மாஸ்டர்ஸ் 1000 தொடர் வெற்றி எனும் சாதனையையும் அவர் முறியடித்தார்.

ஏண்ரி ரூப்லெவ்வை 6-2, 6-4 என்ற புள்ளிகளில் வீழ்த்தியதன் மூலம் சின்னர் இந்த உயர்மட்ட ATP தொடரில் தனது 32-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்தார்.

களிமண் அரங்கின் மற்றொரு முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காராஸ் காயம் காரணமாக விலகியிருப்பதால் சின்னருக்கு இவ்வாண்டில் அது மேலும் பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

24 வயது சின்னர், 2023 ஆம் ஆண்டு இத்தொடரின் வெற்றியாளரான டெனில் மெட்வெடெவ்வை அடுத்த சுற்றில் எதிர்கொள்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)