கோலாலம்பூர், மே 12 (பெர்னாமா) -- போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது உட்பட, குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியிடமோ அல்லது உறுப்பினரிடமோ, போலீஸ் எவ்வித சமரசமும் கொள்ளாது.
லங்காவி தீவில் போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்பிற்கு போலீஸ் உறுப்பினர் ஒருவர் மூளையாக செயல்படுவதாக கூறப்பட்டிருப்பதை தமது தரப்பு அறிந்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
"நாங்கள் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இதில் யார் யார், எந்தெந்த தனிநபர்கள் அல்லது எந்தெந்த குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும்.
சட்டம், பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால், நாங்கள் போலீஸ் புகார் அளிக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்," என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் ஐந்தாவது பி.டி.ஆர்.எம் கலந்தாலோசிப்பு நிகழ்ச்சியின் தொடக்க விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய முஹமட் காலிட் அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)