Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

உயிர் காக்கும் உன்னத சேவை - செம்பிறை சங்கத்தின் இரத்ததான முகாம்

03/05/2026 05:19 PM

கம்பார், 03 மே (பெர்னாமா) --  சமூக பொறுப்புணர்வையும், மனித நேயத்தையும் வலியுறுத்தும் வகையில் பேராக், கம்பாரில் உள்ள கோபெங் மாவட்டத்தைச் சேர்ந்த செம்பிறைச் சங்கம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இரத்ததானம் செய்வீர், உயிர் காப்பீர் என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முகாமில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்ததாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் இஸ்ராவேலு டேவிட் கூறினார்.

மக்கள் மத்தியில் நிலவும் இரத்ததானம் குறித்த தவறான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, இளைஞர்கள் இரத்ததானம் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இஸ்ராவேலு கூறினார்.

இம்முகாமில் சேகரிக்கப்படும் இரத்தம், ஆபத்தில் இருப்பவர்களின் உயிரைக் காப்பாற்ற, விபத்து, அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் போன்ற நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக அவர் விளக்கினார்.

இரத்ததான முகாமின் முக்கியத்துவத்தையும், அதன் சமூக பயன் குறித்த தனது அனுபவத்தையும் தன்னார்வலர் ஒருவர்  பகிர்ந்து கொண்டார்.

இன்று, பேராக், கம்பாரில் உள்ள ECONSAVE வளாகத்தில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)