Ad Banner
 விளையாட்டு

​'ரேலி' கார் பந்தயத்தில் சாதனைப் படைத்தார் குணசீலன் ராஜு

27/04/2026 04:28 PM

மைல் சிட்டி , ஏப்ரல் 27 (பெர்னாமா) --  சீனாவின் YUNNAN மாகாணத்தில் உள்ள மைல் நகரில் நடைபெற்ற, 2026 MILE AUTO RALLY அனைத்துலக வெற்றியாளர் போட்டியில், கலந்து கொண்ட மலேசிய rally கார் பந்தய வீரர் குணசீலன் ராஜூ.....

1400 C-C பிரிவில் இரண்டாவது இடத்தையும், அனைத்துலக பொதுப்பிரிவில் ஆறாவது இடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

​15 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துலக அரங்கில் களம் கண்ட இவர், தமது சக ஓட்டுநர் 'MALAY CHONG' என்று அழைக்கப்படும் CHONG-குடன் இணைந்து, 80-க்கும் மேற்பட்ட உள்நாட்டுப் போட்டியாளர்கள் மற்றும் 24 அனைத்துலக அணிகளுடன் மோதி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

Left-hand drive எனப்படும் இடதுபுற ஓட்டுநர் இருக்கை  கொண்ட VOLKSWAGEN POLO 1.4L RALLY ரக காரை செலுத்திய குணசீலன், தொடக்கத்தில் பல சவால்களை எதிர்கொண்டார். 

குறிப்பாக போட்டியின் முதல் கட்டம், Leg 1-இன் போது காரின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், 4.5 கிலோமீட்டர் தூரத்தை மிகவும் சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

​ஆரம்பக் கட்டங்களில் நேரத்தை இழந்தபோதிலும், 2-வது மற்றும் 3-வது கட்டங்களில் மிகச் சிறப்பான மீள்வருகையைத் தந்து, வேகத்தையும் செயல்திறனையும் படிப்படியாக அதிகரித்து தரவரிசையில் அவர் முன்னேறினார்.

இது குறித்த பேசிய குணசீலன், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்த அளவிலான பயிற்சிகளை செய்து இப்போட்டியில் கலந்து கொண்டதும், இடதுபுற ஓட்டுநர் இருக்கை கொண்ட காரை செலுத்தியதும் புதிய சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார்.

​2026 அனைத்துலக YUSHING DIOMAND CUP MILE AUTO RALLY என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இப்போட்டி, MILE நகரின் எழில்மிகு சூழலிலும், புகழ்பெற்ற Taiping ஏரி சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களிலும் நடைபெற்றது.

இதனிடையே, அனைத்துலகப் பொதுப் பிரிவில் அயர்லாந்து வீரர் முதலிடத்தைப் பிடித்த வேளையில் 1.4L பிரிவில் உள்ளூர் சீனப் போட்டியாளர் வெற்றி பெற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)