கௌகா, 27 ஏப்ரல் (பெர்னாமா) -- தென்மேற்கு கொலம்பியாவில் உள்ள நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
காஜிபியோ நகரில் உள்ள பான்-அமெரிக்கா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட 38 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில், போபயான் மற்றும் காலியை இணைக்கும் அந்த வழித்தடத்தில் இருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.
கிளர்ச்சியாளர்கள் நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டதாக இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளில் இயந்திரங்கள் இடிபாடுகளையும் சேதமடைந்த வாகனங்களையும் அகற்றுவதும், மக்களும் அவசரக்காலப் பணியாளர்களும் அபள்ளத்தைச் சுற்றித் திரண்டிருப்பதும் பதிவாகியிருந்தது.
அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய தற்காப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ், 2016 அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்த FARC அமைப்பின் பிரிவுக் குழுவான Estado Mayor Central-லே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடையில், சௌச்சா மற்றும் வாலே வட்டாரங்களில் 26 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)