Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2026 தோமஸ் கிண்ணம்; காலிறுதிக்குத் தேர்வாகிய மலேசியா

30/04/2026 05:20 PM

ஹொர்சென்ஸ் , ஏப்ரல் 30 (பெர்னாமா) -- தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டியின் குழு அளவிலான ஆட்டங்களை மலேசியா நேற்றுடன் நிறைவு செய்தது.

பி குழுவில் இடம்பெற்றுள்ள மலேசியாவும் ஜப்பானும் மோதிய ஆட்டத்தில், தேசிய அணி 2-3 என்ற நிலையில் தோல்வி கண்டது.

இருப்பினும், குழு அளவில் இரண்டாம் இடத்தை பிடித்ததால், மலேசியா காலிறுதிக்கு தேர்வாகியது.

முதல் ஆட்டத்திலேயே, தேசிய ஒற்றையர் லியோங் ஜுன் ஹாவ் 11-21, 15-21 என்ற நேரடி செட்களில் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இம்முறை ஏரன் சியா - சோ வூய் யிக் ஜோடி களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலேசியா புதிய உக்தியை கையாண்டாது.

டீ கை வுனுடன் ஏரன் சியா ஜோடி சேர்ந்த வேளையில், சோ வூய் யிக், நூர் இசுடின் ரம்சானியுடன் விளையாடினர்.

இந்நிலையில், ககேரு குமாகை - ஹிரோகி நிஷி ஜோடியுடன் விளையாடிய தீ காய் வூன் - ஏரன் சியா கடுமையான போராட்டத்திற்கு பின்னர், 16-21, 21-14, 21-19 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றனர்.

ஆட்டம் 1-1 என்று சமநிலை கண்டாலும், இரண்டாம் ஒற்றையர் ஆட்டத்தில், மலேசியாவின் Justin Hoh, உலகின் 19-ஆம் நிலை ஆட்டக்காரரான யூஷி தனகாவிடம் 15-21, 12-21 என்ற நிலையில் தோல்வி கண்டார்.

மூன்றாம் ஆட்டத்தில், சோ வூய் யிக் - நூர் இசுடின் ரம்சானி 21-14, 19-21, 19-21 என்று தோல்வி கண்ட நிலையில், ஐந்தாம் ஆட்டத்தில் களமிறங்கிய தேசிய ஒற்றையர் லீ சி ஜியா, செஃப் வதனாபேவை 21-13, 21-18 தோற்கடித்து மலேசியாவுக்கு இரண்டாம் புள்ளியை பெற்றுத் தந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)