Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

பண்டஸ்லீகா; முனிக் தொடர்ந்து முதலிடம்

26/04/2026 04:15 PM

மாயின்ஸ், 26 ஏப்ரல் (பெர்னாமா) --  பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான பாயன் முனிக், மாயின்ஸை 4-3 என்ற கோல்களில் தோற்கடித்தது.

முதல் பாதி ஆட்டத்தின் 15, 29 மற்றும் 47-வது நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து மாயின்ஸ் முன்னணி வகித்தது.

இவ்வாட்டத்தில் மாயின்ஸ் அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி 53-வது நிமிடத்தில் முனிக் முதல் கோலை அடித்தது.

அதன் பின்னர், 73-வது நிமிடத்தில் இரண்டாம் கோலை அடித்து முனிக், மாயின்ஸ் அணியை நெருங்கியது.

ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், 80-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து முனிக் ஆட்டத்தை சமப்படுத்தியது.

வெற்றிக் கோலை தேடி இரு அணிகளுமே முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், 83-வது நிமிடத்தில் ஹெரி கென் நான்காவது கோலை அடித்து பாயன் முனிக்கின் வெற்றியை உறுதி செய்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)