Ad Banner
 பொது

ஓப் தொயு: குடிநுழைவுத் துறை மூத்த அதிகாரி உட்பட 10 பேர் கைது

26/04/2026 03:26 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 26 (பெர்னாமா) -- நேற்று சனிக்கிழமை, கெடா, புக்கிட் காயு ஹித்தாம், குடிநுழைவு, சுங்கத்துறை, தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொயு சோதனை நடவடிக்கையின் போது, குடிநுழைவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கெடா குடிநுழைவு துறை உட்பட எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து புத்ராஜெயா குடிநுழைவு துறை தலைமை அலுவலகத்தின் உளவு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட உளவு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய உதவிய முகவர் என்று நம்பப்படும் தாய்லாந்து மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இரு நபர்களும், அவர்களை நாட்டிற்குள் அழைத்துச் சென்ற மற்றொரு உள்நாட்டினரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், பாகிஸ்தான் பிரஜை ஒருவர் மற்றும் அவர்களை நாட்டிற்குள் செல்ல உதவியதாக நம்பப்படும் மூத்த குடிநுழைவு அதிகாரி ஒருவர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்களில் ஒருவர் கருப்புப்பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் என்றும் பாகிஸ்தான் பிரஜை போலி மின்னியல் விசாவை பயன்படுத்தியிருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)