Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை - ஈரானிய வெளியுறவு அமைச்சர்

25/04/2026 06:29 PM

இஸ்லாமாபாத், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கான தமது பயணத்தின் போது, அமெரிக்க அமலாக்கத் தரப்புடன், ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையித் அப்பாஸ் அர்காஷி எந்தப் பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள மாட்டார் என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பயணத்தின் போது, ​​அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த ஈரானின் நிலைப்பாடுகளை, பாகிஸ்தானுடன் மட்டுமே அர்காஷி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அது மேலும் கூறியது.

அமெரிக்கர்களைச் சந்திக்கும் திட்டம் எதுவும் அர்காஷி-க்கு இல்லை என்றாலும், மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த ஈரானின் பரிசீலனைகளை, தொடர்புப் பாலமாகத் திகழும் இஸ்லாமாபாத்திடம் தெரிவிப்பார் என்று ஈரான் அரசாங்கத் தொலைக்காட்சி ஐ.ஆர்.ஐ.பி கூறியது.

அர்காஷி தலைமையிலான ஈரானிய பேராளர் குழு வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானுக்கு வந்தடைந்ததை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

இதனிடையே, ஓமான் மற்றும் ரஷ்யா-விற்கும் பயணிக்கவிருப்பதாக அர்காஷி தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)