கோலாலம்பூர், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-ஐ வழிநடத்த ஒரு புதிய தலைமை ஆணையரைத் தாமே தேர்வு செய்யப்போவதாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தை எந்தக் கட்சியும் அரசியலாக்கத் தேவையில்லை என்று அவர் தமது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
ஊழல், முறைகேடுகள் மற்றும் அதிகார மீறல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் நாட்டின் முக்கிய நிறுவனமாக எஸ்.பி.ஆர்.எம் தொடர்ந்து திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதில் இந்தப் பதவி மிகவும் முக்கியமானது என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
அத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதில் எஸ்.பி.ஆர்.எம் தொடர்ந்து திறம்படப் பங்காற்ற இந்தப் பதவி மிகவும் அவசியம் எனவும் அவர் விளக்கினார்.
எனவே, எதிர்காலத்தில், எஸ்.பி.ஆர்.எம்-ஐ வழிநடத்த சிறந்த ஆணையரை தாமே தீர்மானிக்கவிருப்பதாக மாமன்னர் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)