Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டி; பிரான்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது

03/05/2026 06:37 PM

டென்மார்க், 03 மே (பெர்னாமா) --  தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டி.

டென்மார்க், ஃபோரம் ஹொர்சென்ஸில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 2022-இன் வெற்றியாளரான இந்தியாவை 3 - 0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

அந்நாட்டின் முக்கிய ஆட்டக்காரரும் உலகத் தரவரிசையில் நான்காம் இடத்திலும் இருக்கும் கிறிஸ்டோ போபோவ் பாக்ஸி, உலகத் தரவரிசையில் 18-ஆம் இடத்தில் இருக்கும் இந்திய ஆட்டக்காரர் ஆயுஷ் ஷெட்டியை 39 நிமிடங்களில் 21-11, 21-9 என்றப் புள்ளிகளில் தோற்கடித்தார்.

பின்னர், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள அலெக்ஸ் லானியர், கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-16, 21-18 என்றப் புள்ளிகளில் வீழ்த்தி தமது அணியை 2-0 என்று முன்னிலைப்படுத்தியதோடு, பிரான்சின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தினார்.

இதனிடையே, மூன்றாவது ஒற்றையர் ஆட்டக்காரரான டோமா ஜூனியர் போபோவ் 48 நிமிடங்களில் எச்.எஸ்.பிரான்னொயை 21-19, 21-16 என்றப் புள்ளிகளில் தோற்கடித்து பிரான்ஸை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறச் செய்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரான்ஸ் நடப்பு வெற்றியாளரான சீனாவுடன் நாளை மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)