மென்செஸ்டர், ஏப்ரல் 15 (பெர்னாமா) -- 2026 Major League Soccer பருவத்தின் மோசமான தொடக்கத்தைத் தொடர்ந்து டேவிட் பெக்கமிற்குச் சொந்தமான இன்டர் மயாமி கிளப்பின் நிர்வாகி ஜாவியர் மஸ்செரானோ பதவி விலகியதால் அக்கிளப் தற்போது நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
லியோனால் மெர்சி போன்ற நட்சத்திர விளையாட்டாளர்களைக் கொண்ட அந்த அணி ஏழு போட்டிகளில், 12 புள்ளிகளுடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதுமட்டுமின்றி, வெற்றியாளர் கிண்ணத்தில் Nashville அணியிடம் தோல்வி கண்டு தொடக்கத்திலேடே வெளியேறியது.
இன்டர் மயாமி தனது புதிய அரங்கில் நடந்த New York Red Bulls மற்றும் Austin ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் 2-2 என்ற புள்ளிகளில் சமன் கண்டதால், சொந்த மண்ணிலும் அக்கிளப்பின் அடைவுநிலை கவலையளிக்கும் நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக Mascherano அறிவித்துள்ளார்.
அவரின் இடத்தை தற்போது Guillermo Hoyos தற்காலிகமாக நிரப்பியுள்ளார்.
இந்த அண்மைய நிலவரம், அர்ஜெண்டினா தேசிய அணியில் Mascherano-வுக்கு நெருக்கமானவரான Messi-க்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்டுள்ள தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், தனது நிலைய வலையமைப்பு முழுவதும் போதுமான கையிருப்பு இருப்பதை உறுதி செய்வதற்காக, விநியோகச் சங்கிலியைத் தொடர்ந்து தீவிரமாக நிர்வகித்து வருவதாக பெட்ரோனாஸ் குறிப்பிட்டுள்ளது.
பெட்ரோனாஸ் தனது பொதுப் பங்கு துணை நிறுவனமான Petronas Dagangan மூலம் நாட்டின் எரிபொருள் தேவைகளில் சுமார் 50 விழுக்காட்டைப் பூர்த்தி செய்வதோடு, எஞ்சியவை மலேசியாவில் செயல்படும் பிற எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
அனைத்து மலேசியர்களுக்கும் நிலையான மற்றும் நம்பகமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை பெட்ரோனாஸ் மீண்டும் வலியுறுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)