கோலா திரெங்கானு, 13 ஏப்ரல் (பெர்னாமா) -- இவ்வாண்டு திரெங்கானுவில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசாங்கம் பிரத்யேகமாக ஆறு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அம்மாநிலத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் வீடமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகளும் இத்திட்டத்தில் அடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
"கல்வி ஆளுமை, தொழில்நுட்ப ஆளுமை, இராணுவ மற்றும் பாதுகாப்புத் தயார்நிலை ஆகிய அம்சங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆகவே, நான் குறிப்பிடும் இவை அனைத்திலும், மிகவும் ஏழ்மையான ஒரு குழு ஒதுக்கப்பட்டால், அதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதனால்தான் திரெங்கானு மாநிலத்திற்கான திரெங்கானு வறுமை ஒழிப்புத் திட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்", என்றார் அவர்.
மற்றொரு நிலவரத்தில், திரெங்கானு மெட்ரிகுலேஷன் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், புக்கிட் பாயோங்கில் உள்ள திரெங்கானு மெட்ரிகுலேஷன் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தவும், அதற்கான தொடக்கக்கட்ட ஒதுக்கீடாக இரண்டு கோடியே 70 லட்சம் ரிங்கிட்டை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
அதன் கட்டுமானம் விரைவுப்படுத்தப்பட்டால் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"திரெங்கானுவிலிருந்து மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 70,000 பேரைக் கடந்துள்ளது. கல்விச் சூழலைப் பொறுத்தவரை இந்த மாநிலத்தில் இன்னும் மெட்ரிகுலேஷன் கல்வி இல்லை. எனவே, இந்தக் கல்லூரியின் தேவையை மறுக்க முடியாது" என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)