கோலாலம்பூர், 06 ஏப்ரல் (பெர்னாமா) -- புகழ்பெற்ற தொலைக்காட்சி நிருபரான டத்தோ கரம் சிங் வாலியா, இன்று அதிகாலை மணி 3.30க்கு கிள்ளானில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.
இத்தகவலை அவரின் தம்பியும், மீடியா ப்ரிமா நிறுவனத்தின் செய்தி மற்றும் அண்மைய விவகாரங்களுக்கான குழும நிர்வாக ஆசிரியருமான ஜஸ்பன்ட் சிங் தெரிவித்தார்.
பேராக், தெலுக் இந்தானில் 1959-ஆம் ஆண்டு, பஞ்சாபி சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி குடும்பத்தில் பிறந்த 67 வயதான கரம் சிங், 1995-ஆம் ஆண்டு டிவி3-இல் தொலைக்காட்சி நிருபராக தமது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார்.
உடல்நலப் பிரச்சனைக் காரணமாக 2014-ஆம் ஆண்டில் அவர் ஓய்வுப் பெற்றார்.
நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுச்சூழல் நிருபராக அறியப்படும் கரம் சிங், இரு முறை ஶ்ரீ அங்கசா விருதை வென்றுள்ளார்.
அதோடு, 2004 முதல் 2007 வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சிறந்த சுற்றுச்சூழல் தொலைக்காட்சி நிருபர் பிரிவிற்கான மலேசிய பத்திரிகைக் கழகம், எம்.பி.ஐ விருதையும் அவர் வென்றுள்ளார்.
கரம் சிங், ஜூன் 2024-ஆம் ஆண்டில் Tabung Kasih @HAWANA மூலம் நிதியுதவி பெற்ற செய்தியாளர்களில் ஒருவராவார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)