Ad Banner
Ad Banner
 உலகம்

மியன்மார் அதிபராக மின் ஆங் ஹ்லைங் தேர்வு

04/04/2026 06:25 PM

மியன்மார், ஏப்ரல் 04 (பெர்னாமா) -- மியான்மரின் புதிய அதிபராக அந்நாட்டின் இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 584 வாக்குகளில் 429 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

வாக்கெடுப்பின் போது, Pyithu Hluttaw-வின் கீழ்சபை உறுப்பினர்கள் பரிந்துரை 
செய்த அதிபர் மின் ஆங் ஹ்லைங், 429 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 

இந்நிலையில், இரு அவைகளின் இராணுவ குழு சார்பில் போட்டியிட்ட
U Nyo Saw 126 வாக்குகளையும், மேலவை உறுப்பினரான Nan Ni Ni Aye 
29 வாக்குகளையும் பெற்றனர்.     

மியன்மார் நாட்டின் தேர்தல் முறைப்படி, மூன்று துணை அதிபர்களிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க அதிபர் தேர்தல் குழு வாக்களிக்கின்றது.

மியான்மரின் இந்த நடவடிக்கை பெயரளவில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குத் திரும்புவது போல் தோன்றினாலும் உண்மையில் இது இராணுவத்தின் கட்டுப்பாட்டைத் தற்காக்கும் முயற்சியாகவே அனைத்துலக அளவில் பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)