Ad Banner
Ad Banner
 உலகம்

இந்தோனேசிய கடற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

02/04/2026 05:39 PM

மனாடோ, 02 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று இந்தோனேசியாவின் வட மொலுக்கா கடற்பகுதியில்  ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் மனாடோ நகரில் உள்ள மருத்துவமனையுடன் மேலும் பல கட்டிடங்களும் சேதமடைந்ததுள்ளன.

அதுமட்டுமின்றி ஆடவர் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடற்கரைகளில் சுனாமி ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர். அந்த எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது.

இதனிடையே, மனாடோ பகுதியில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 70 வயதுடைய முதியவர் உயிரிழந்ததாகத் தேடல் மற்றும் மீட்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

அதிக நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியான இந்தோனேசியா, புவியின் மேற்பரப்பில் உள்ள மாறுபட்ட அமைப்புகள் காரணமாக அதிகமான நிலநடுக்கங்களால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)